OUR CLIENTS
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்!
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்! Posted on 08-Nov-2016 தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்  மகளிர் நிலம் வாங்கும் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்!

தருமபுரி
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் மகளிர் நிலம் வாங்கும் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றன.

தகுதி
•விண்ணப்பதாரர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மகளிராக இருக்க வேண்டும்.

•18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

•விண்ணப்பதாரர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.

•விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது

•ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர். ஒரு திட்டத்தின் கீழ் ஒருமுறை மானிய உதவி பெற்றால், பின்னர் அவர் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயன் பெற இயலாது.

நிபந்தனைகள்
•வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தொpவு செய்து கொள்ள வேண்டும்

•நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

•இத்திட்டத்தின்கீழ் நில மற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலமும் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலமும் வாங்கலாம்.

•விண்ணப்பதாரர் மற்றம் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயாpல் உள்ள நிலம் மற்றும் வாங்க உத்தேசித்துள்ள உறுதி செய்துள்ள நிலம் உள்பட் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம்.

•சார் பதிவாளரிடமிருந்து நிலத்தின் மதிப்பிற்கான வழிகாட்டி மதிப்பு பெறப்பட வேண்டும்.

•நிலத்தின் மதிப்பு அரசின் வழிகாட்டி மதிப்பிற்கான வழிகாட்டி மதிப்பு பெறப்பட வேண்டும்.

•விண்ணப்பம் செய்த மகளிர் பெயாpல் மட்டுமே வாங்கப்படும் நிலப்பதிவு செய்யப்பட வேண்டும்.

•இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100மூ முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
•வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 20 வருடங்களுக்கு விற்பான செய்யக் கூடாது. எனவே நலம் வாங்கியவுடன் மாவட்ட மேலாளர்கள் சார்பதிவாளரிடம் தொpவித்து இந்நிலம் 20 வருடங்களுக்கு விற்பனை செய்யக் கூடாதவாறு (lien) வில்லங்கம் ஏற்படுத்திட வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 1077 / 1800 425 7016 / 1800 425 1071 / 89 03 89 1077 (ம) 04342 - 260007 என்ற தொலைபேசிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கே.விவேகானந்தன்  தெரிவித்துள்ளார்.

Label