OUR CLIENTS
வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத்
வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் Posted on 10-Nov-2016 வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத்

ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதன் புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணியின் ரங்கன ஹேரத்.


இலங்கை கிரிக்கெட் அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் அணித்தலைவர் ரங்கன ஹேரத் 89 ஓட்டங்கள் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 38 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெறும் ஒன்பது அணிகளுக்கு எதிராக ஐந்து விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டில் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் அஸ்வினை பின்னுக்கு தள்ளி ஹேரத் முதலிடம் பிடித்தார்.

இதற்கு முன்னர் இலங்கை அணியின் முத்தையா முரளிதரனும், தென் ஆப்ரிக்காவின் டெயில் ஸ்டெயினும் இந்த சாதனையை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Label