OUR CLIENTS
லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க : இல.கணேசன்
லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க : இல.கணேசன் Posted on 12-Nov-2016 லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க : இல.கணேசன்

மதுரை
பாஜகவைப் பொருத்தவரை லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி மட்டுமல்ல, அதை அனுமதிக்காத கட்சியும் கூட. இதை வேறு கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான இல.கணேசன் தெரிவித்தார்.


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் வெற்றி, தோல்வியால் தமிழக அரசுக்கு எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை. ஆட்சியில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதேநேரம், நல்ல கட்சி, சிறந்த தலைவர், நேர்மையான வேட்பாளர் யார் என்பதை எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

பாஜகவைப் பொருத்தவரை லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி மட்டுமல்ல, அதை அனுமதிக்காத கட்சியும் கூட. இதை வேறு கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க இயலாது. லஞ்ச, ஊழல் இல்லாத அரசு என்பது தமிழகத்தின் தேவையாக இருக்கிறது. இதை மனதில் வைத்து வாக்களிப்பது அவசியம். மேலும், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து எல்லையில் சண்டையிட்டு வெற்றி பெற்றதற்கு மோடி அரசின் திறமையான நிர்வாகமே காரணம் என கூறினார்.

கள்ள நோட்டு மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிரான பிரதமரின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். இவ்விரு நடவடிக்கைகளையும் சரியே என நினைத்தால் இடைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Label