OUR CLIENTS
சினிமா நடிகை சபர்ணா துாக்கிட்டு தற்கொலை; அழுகிய நிலையில் உடல் மீட்பு
சினிமா நடிகை சபர்ணா துாக்கிட்டு தற்கொலை; அழுகிய நிலையில் உடல் மீட்பு Posted on 12-Nov-2016 சினிமா நடிகை சபர்ணா துாக்கிட்டு தற்கொலை; அழுகிய நிலையில் உடல் மீட்பு

சென்னை
சினிமா நடிகை சபர்ணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அழுகிய நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார்.


சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் கோவில் தெருவில், பேஸ் அப்பார்ட்மென்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நடிகை சுபர்ணா ஆனந்த் என்கிற சுகுணா (வயது 25). டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த சுபர்ணா, சுகுணா வெட்கிரைண்டர் விளம்பரத்தில் நடித்து பிரபலம் ஆனார். ஏராளமான  தமிழ்ப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தனுஷ் நடித்த படிக்காதவன், காளை, விஷாலின் பூஜை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று காலை முதல் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவு பூட்டப்பட்டிருக்கும் என நினைத்து கதவை தள்ளினர். ஆனால் கதவு மூடிய நிலையில் திறந்தே இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் சுபர்ணா தொங்கிய நிலையில் இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. கையில் ஒரு வெட்டுக்காயம் இருந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுபர்ணா வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு அவர் எழுதி வைத்திருந்த 3 பக்க தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், ‘நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், பணக்கஷ்டத்தில் சிக்கியதால் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது காதலர் அஷ்வின் என்பவரைப் பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சுபர்ணாவில் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் மதுரவாயலில் வேறொரு இடத்தில் வசித்து வருகின்றனர்.

நடிகை சுபர்ணா தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label