OUR CLIENTS
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதியின் மகன் உயிருடன் மீட்பு
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதியின் மகன் உயிருடன் மீட்பு Posted on 19-Jul-2016 தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதியின் மகன் உயிருடன் மீட்பு

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருப்பவர், சாஜித் அலி ஷா. இவரது மகன் அவாயிஸ் ஷா. பிரபல வழக்கறிஞரான அவாயிஸ் ஷாவை கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கராச்சி நகரில் உள்ள கிளிப்டன் பகுதியில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.


அவர் உயிருடன் உள்ளாரா? அல்லது, கொல்லப்பட்டாரா? என்பது தெரியாமல் இருந்த நிலையில் கைபர் பகதுங்வா மாகாணத்தில் இன்று தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களில் ராணுவத்தினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இங்குள்ள டங்க் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவாயிஸ் ஷாவை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

அவர் மீட்கப்பட்ட விபரத்தை சிந்து மாகாண ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஜித் அலி ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் தொலைபேசி மூலம் தெரிவித்து, வாழ்த்து கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Label