OUR CLIENTS
திருப்பதி அருகே இளம்பெண் கற்பழித்துக்கொலை
திருப்பதி அருகே இளம்பெண் கற்பழித்துக்கொலை Posted on 19-Nov-2016 திருப்பதி அருகே இளம்பெண் கற்பழித்துக்கொலை

திருமலை
திருப்பதி அருகே இளம்பெண் கற்பழித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பதி புறநகர் பகுதியான ஹரிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆகி, திருப்பதியை அடுத்த மங்களம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் ரேகா (வயது 24), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பார்வதியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே பார்வதியும், இளம்பெண்ணான ரேகாவும் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் ஹரிபுரம் காலனி பகுதியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்து கொண்டிருந்தது. கிராம மக்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சென்று விட்டனர். ஆனால் பார்வதி, ரேகா ஆகியோர் மட்டும் வீட்டில் படுத்துத்தூங்கி விட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் யாரோ பார்வதியின் வீட்டுக்கு வந்துள்ளனர். தூங்கிக்கொண்டிருந்த ரேகாவை தூக்கிச்சென்று கிராமத்துக்கு அருகே ஒரு கொட்டகையில் வைத்து கற்பழித்து, கல்லால் தாக்கிக்கொலை செய்துள்ளனர். ரேகாவின் பிணத்தை சம்பவ இடத்திலேயே போட்டு விட்டு மர்மநபர்கள் தலைமறைவாகி விட்டனர். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த பார்வதி தனது மகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கும்பாபிஷேக விழா நடந்த கோவிலுக்குச் சென்று ரேகாவை தேடினார், எங்கும் அவரை காணவில்லை. கிராமத்துக்கு அருகே கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, அதில் ரேகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து பார்வதி கதறி அழுதார். இதுபற்றி பார்வதி எம்.ஆர். பள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மது, சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர்ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரேகாவின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சம்பவ இடத்தில் கைரேகையை பதிவு செய்தனர். மேலும் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது, கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு அங்குள்ள தார் சாலை வரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக எம்.ஆர்.பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் சம்பந்தப்பட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Label