OUR CLIENTS
21 விவசாயிகளிடம் தலா ரூ.40 ஆயிரம் வசூலித்து போலி நிலப்பட்டா வழங்கியதாக வாலிபர் கைது: நாகலாபுரம் வருவாய் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
21 விவசாயிகளிடம் தலா ரூ.40 ஆயிரம் வசூலித்து போலி நிலப்பட்டா வழங்கியதாக வாலிபர் கைது: நாகலாபுரம் வருவாய் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு Posted on 19-Nov-2016 21 விவசாயிகளிடம் தலா ரூ.40 ஆயிரம் வசூலித்து போலி நிலப்பட்டா வழங்கியதாக வாலிபர் கைது: நாகலாபுரம் வருவாய் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீகாளஹஸ்தி
21 விவசாயிகளிடம் தலா ரூ.40 ஆயிரம் வசூலித்து, போலி நிலப்பட்டா வழங்கியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாகலாபுரம் வருவாய் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: நாகலாபுரம் மண்டலம் வேம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 28). இவர், ஸ்ரீரங்கராஜபுரம் மண்டலத்துக்குட்பட்ட அரசு நிலங்களுக்கு பட்டா கொடுப்பதாக கூறி ராமகிரி, நாகலாபுரம், ஸ்ரீரங்கராஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 விவசாயிகளிடம் தலா ரூ.40 ஆயிரம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

பணம் வசூல் செய்தவர்களில் 16 பேருக்கு போலி பட்டா தயாரித்து வழங்கியதாகவும், மீதமுள்ள 5 பேருக்கு இன்னும் பட்டா வழங்கவில்லை என்றும் தெரிய வந்தது. அவர் தயாரித்து வழங்கிய போலி நிலப்பட்டாவில், நாகலாபுரம் மண்டல அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி மரணம் அடைந்த ராஜு என்பவரின் பெயரில் போலி கையெழுத்துப் போட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விவசாயிகளுக்கு போலி நிலப்பட்டா தயாரித்து வழங்க, நாகலாபுரம் மண்டல தாசில்தார் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ராஜசேகருக்கு உதவியதாக தெரிகிறது. இதுதொடர்பாக நாகலாபுரம் மண்டல வருவாய்த்துறை ஆய்வாளர் பாலசுந்தரி, கிராம வருவாய் அதிகாரி பாலாஜி, அலுவலக உதவியாளர் சுப்பிரமணியம் ஆகியோர் மீது சத்தியவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

போலி நிலப்பட்டா தயாரித்து வழங்கியதாக ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சத்தியவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி நிலப்நிலப்பட்டா வழங்கியதாக மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Label