OUR CLIENTS
பிரிட்டனில் சிறந்த கிறிஸ்துமஸ் சந்தைகள் இது தான்? திறக்கப்படும் தேதிகளும் அறிவிப்பு
பிரிட்டனில் சிறந்த கிறிஸ்துமஸ் சந்தைகள் இது தான்? திறக்கப்படும் தேதிகளும் அறிவிப்பு Posted on 24-Nov-2016 பிரிட்டனில் சிறந்த கிறிஸ்துமஸ் சந்தைகள் இது தான்? திறக்கப்படும் தேதிகளும் அறிவிப்பு

பிரிட்டன்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப் பட உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளிலும் அதற்கான கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஆயாத்தமாகி வருகின்றனர்.


கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், சாண்டா தாத்தா, மின்னொளியில் ஒளிரும் மின்விளக்குகள், மற்றும் மதுபானங்கள் என பல பொருட்களை மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வாங்கிவந்து தங்கள் வீடுகள் முழுவதும் நிரப்பி கிறிஸ்துமஸை ஒரு திருவிழா போல் கொண்டாடுவர். குறிப்பாக சிலர் வீட்டில் விருந்தினர்களும் வந்திருப்பர்.

தற்போது கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் சூழ்நிலையில், பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தொடர்பான பொருட்கள் வாங்க சிறந்த இடம் எது, அவைகள் எல்லாம் எப்போது திறக்கப்படுகின்றன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Bath (பாத்)
பிரிட்டனின் முக்கிய இடம் பாத். Bath Abbey தேவாலயத்துக்கு அருகே திறக்கப்பட உள்ளது. இங்கு 170 க்கும் மேற்பட்ட கடைகள் மரச்சாமன்களால் செய்யப்பட்ட அனைத்து வகை பொருட்களையும் இங்கு வாங்கிக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இது வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி திறக்கப்பட்டு டிசம்பர் 11 ஆம் திகதியோடு முடிவடைகிறது.

Belfast (பெல்பாஸ்ட்)
இங்கு சிறந்த கைவினைகளால் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் தொடர்பான கைவினைப்பொருட்கள் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் நீங்கள் சாண்டா தாத்தாவிடம் என்ன கேட்க விரும்புகிறீர்களோ அதை ஒரு கடிதமாக எழுதி அங்கிருக்கும் தபால் பெட்டியில் போட்டால், அதற்கான பதிலை சாண்டா தாத்தா டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் பதில் கடிதம் ஒன்றை அனுப்புவார்.

இது வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திறக்கப்பட்டு டிசம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

Canterbury(கேண்டர் பரி)
பிரிட்டனின் வண்ணமயமான நகரம் இங்கு சாண்டா தாத்தக்களை அதிகம் காணலாம் என்றும் கிறிஸ்துமஸ் தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது வரும் 26 ஆம் திகதி திறக்கப்பட்டு டிசம்பர் 24 ஆம் தேதி முடிவடையும் என கூறப்படுகிறது.

Cardiff (கார்டிப்)
இங்குதான் கிற்ஸ்துமஸ்க்கு முக்கிய தேவையான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கையால் செய்யப்பட்ட மரச்சாமன்கள் குறிப்பாக கிறிஸ்துமஸ்க்கு பெயர் போன மதுபானங்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இது வரும் 25 ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 23 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

Leeds (லீட்ஸ்)
பிரிட்டனில் உள்ள பெரும்பாலனோர் இங்கு தான் கிறிஸ்துமஸ்க்கு தேவையான பொருட்களை அதிகம் வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது. இங்கு முகத்தில் ஓவியம் வரைதல், கிறிஸ்துமஸ் தொடர்பான பாடல்கள், மற்றும் இங்கு உள்ள கடைகள் எல்லாம் ஒரு உண்மையான இயற்கை வயல் போன்று காசியளிக்கும் என்றும் பொருட்கள் வாங்குவதற்கு சிறந்த இடம் என கூறப்படுகிறது.

இது வரும் 27 ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 18 ஆம் தேதியோடு முடிவடைகிறது என கூறப்பட்டுள்ளது.

Liverpool(லிவர் பூல்)
இங்கு திறக்கப்படும் சந்தைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக St George’s Plateau என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது. கூடுதல் சிறப்பாக Dream Work Light என்ற போட்டிகளை நடத்தவுள்ளது. மேலும் அங்கு பல வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் அதற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வருகிறது.

Salisbury(சாலிஸ்பரி)
இங்கு லைவ் மியூசிக் கேட்க முடியும், அதுமட்டுமின்றி பொருட்கள் வாங்க வருபவர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்பதற்காக பொழுதுபோக்காளர்கள் மற்றும் கிறிஸ்துமஸ்துக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது வரும் 24 ஆம் தேதி திறக்கப்பட்டு,டிசம்பர் 18 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

மேலும் இதே போன்று லண்டன், நியூயார்க், வின்செஸ்டர் என இன்னும் பல இடங்களில் திறக்கப்பட உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள் மற்றும் அது திறக்கப்படும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Label