OUR CLIENTS
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்.. அதிமுக, திமுக பங்கேற்பு
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்.. அதிமுக, திமுக பங்கேற்பு Posted on 25-Nov-2016 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்.. அதிமுக, திமுக பங்கேற்பு

புதுதில்லி
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து அதிமுகவும், திமுகவும் பங்கேற்கிறது.


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரும் 28ம் தேதி நாடு முழுவதும் கண்டன நாள் அனுசரிக்கப்படும் என்று நேற்று முன்தினம் முடிவெடுத்தது. தொடர்ந்து, நேற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி அவைக்கு வராமல் விவாதம் நடத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு அதேபோன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், வரும் 28ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற உள்ள கண்டன நாள் அனுசரிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பங்கேற்க உள்ளன. இது தவிர, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்துகின்றன.

Label