OUR CLIENTS
நாளை 3-வது டெஸ்ட்: இந்தியா அதிரடி தொடருமா?
நாளை 3-வது டெஸ்ட்: இந்தியா அதிரடி தொடருமா? Posted on 25-Nov-2016 நாளை 3-வது டெஸ்ட்: இந்தியா அதிரடி தொடருமா?

மொகாலி
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.


டெஸ்ட் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 246 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற இந்தியா முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு போட்டி நடக்கிறது. 2-வது டெஸ்டில் அசத்திய இந்திய அணி இப்போட்டியிலும் அதிரடியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

இந்தியாவின் பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி முதுகெலும்பாக திகழ்கிறார். இத்தொடரில் அவர் இதுவரை ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 337 ரன் குவித்து உள்ளார். மேலும் முரளி விஜய், புஜாரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

அணிக்கு திரும்பி உள்ள தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டில் சொபிக்கவில்லை. அவர் திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளார். இதேபோல் மிடில் ஆர்டர் வரிசையில் ரகானேவும் ரன் குவிக்க வேண்டும். இருந்தபோதிலும் இந்தியாவின் பேட்டிங் வலிமையாகவே காணப்படுகிறது. காயம் அடைந்த சகாவுக்கு பதில் பார்த்தீப் பட்டேல் விளையாடுகிறார்.

பந்துவீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதன்மையாக உள்ளார். முதல் டெஸ்டில் சொபிக்காத அவர் 2-வது டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தினார். மேலும் ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

அதே உத்வேகத்தை தொடர்ந்தால் இங்கிலாந்தை வீழ்த்துவது எளிது. மொகாலி ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். இதனால் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் போராட்ட குணத்தை வெளிகாட்டியது. ஆனால் 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்காமல் சரண்டர் ஆனது.

இதனால் அந்த அணி சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. அஸ்வின் பந்தில் திணறிய பென் டக்கெட்டுக்கு பதிலாக பட்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேப்டன் குக், ஜோரூட், ஹமீத், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் ஆண்டர்சன், ரஷீத், ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளனர். காலில் காயம் அடைந்துள்ள ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம். இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் அன்சாரியும் காயம் அடைந்துள்ளார்.

இவர்களுக்கு பதில் ஸ்டீவன் பின், கிரேந்பட்டி இடம் பெறலாம். இங்கிலாந்து அணி திடீரென எழுச்சி பெறும் திறமை கொண்ட அணியாகும். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் இந்திய அணி கவனமுடன் விளையாடுவது அவசியம்.

3-வது டெஸ்ட் போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரகானே, அஸ்வின், பார்த்தீவ் பட்டேல், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, கருண் நாயர்.

இங்கிலாந்து:- அலஸ்டர் குக் (கேப்டன்), ஹமீத், ஜோரூட், மொயின் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், கேரி பேலன்ஸ், ரஷீத், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், ஸ்டீவன் பின், கிரேத்பட்டி, ஜக்பால், அன்சாரி.

Label