OUR CLIENTS
சுவிஸில் விஷ பூச்சி தாக்குதல்: 140 ராணுவ வீர்ர்களுக்கு தொற்று நோய்
சுவிஸில் விஷ பூச்சி தாக்குதல்: 140 ராணுவ வீர்ர்களுக்கு தொற்று நோய் Posted on 06-Jul-2016 சுவிஸில் விஷ பூச்சி தாக்குதல்: 140 ராணுவ வீர்ர்களுக்கு தொற்று நோய்

சுவிஸில் ராணுவ குடியிருப்பு ஒன்றில் விச மூட்டை பூச்சிகள் புகுந்ததால், அங்கிருந்த 140 ராணுவ வீர்ர்கள், ராணுவத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜுன் 23ம் தேதி La Lecherette பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் குறித்த விச மூட்டை பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, பூச்சிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்த்தால், குடியிருப்பில் இருந்து 140 வீரர்கள் கடந்த ஜுலை 1ம் தேதி Martigny பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது, பூச்சிகள் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நாங்கள் இங்கே இருக்க வேண்டும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  தொற்று நோய் பரவாமல் இருக்க வெளி ஆட்கள் யாருடனும் தொடர்பு கொள்ள கூடாது என அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் இங்கு எந்த வசதியும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றோம். இங்கு இருப்பது மிகவும் கடினம். ஒரு வாரமாக 140 வீர்ர்களும் ஒரே அறையில் இருக்கின்றோம், இது எவ்வளவு கடினம் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பூச்சி கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர், மேலும், இதற்கான சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Label