OUR CLIENTS
அமெரிக்க அதிபர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு மனு தாக்கல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு மனு தாக்கல் Posted on 26-Nov-2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு மனு தாக்கல்

வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பொறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.  ஆனால், டொனால்டு டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் அதிக மக்கள் வாக்குகள் (Popular Vote) பெற்றார்.

ஹிலாரி 48 சதவீத வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 47 சதவீத வாக்குகளும் கிடைத்தன. எனினும், அதிபர்  தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல முக்கிய தொகுதிகளில் வெற்றி பெற்ற டிரம்ப்பின் குடியரசு கட்சி மொத்தம் உள்ள 538 தொகுதிகளில் 276 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஹிலாரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக்சிகன்,பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

அமெரிக்க தேர்தலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்வு நடத்தப்படட்டது. ஓட்டு சீட்டு முறை, இயந்திர முறை, இ-மெயிலில் ஓட்டுகளை அனுப்பும் முறை என பல வகை ஓட்டுப்பதிவு முறை பின்படுத்தப்பட்டது. இந்த 3 மாகாணங்களிலும் கணினிஉதவியுடன் செயல்பட்ட ஓட்டு எந்திர முறை பயன்படுத்தப்பட்டது.

அந்த ஓட்டு இயந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கணினி துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் கூறி இருக்கிறார். எனவே இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதனையடுத்து ஹிலாரி ஆதரவாளர்கள் 3 மாகாணங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். தவறு நடந்துள்ளதா என கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விஸ்கான்சின் மாகாணத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டு கடைசி நாளான நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஷில் ஸ்டெயின் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளார்.

இத்தகவலை விஸ்கான்சின் தேர்தல் கமி‌ஷன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அனேகமாக இந்த மறு வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று மிக்சிகான், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களிலும் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு மனு செய்யபோவதாக ஷில் ஸ்பெயின் தெரிவித்துள்ளார்.

பென்சில் வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்ய திங்கள்கிழமையும் (28-ந் தேதி) மிக்சிகனில் 30-ந் தேதியும் கடைசி நாளாகும். இதன் மூலம், அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்பது விரைவில் தெரிய வரும்.

Label