OUR CLIENTS
பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி 31 பேர் பலி
பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி 31 பேர் பலி Posted on 26-Nov-2016 பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி 31 பேர் பலி

அங்காரா
ஈரான் நாட்டின் டாப்ரிஸ் நகரில் இருந்து மஷாத் நகரம் நோக்கி நேற்று  ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. இதேபோல், செம்னான் நகரில் இருந்து மஷாத் நகருக்கு புறப்பட்டு சென்ற மற்றொரு பயணிகள் ரயில் ஹாப்த்கான் ஸ்டேஷனை தாண்டி வந்து கொண்டிருந்தது. இது டெஹ்ரானில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ளது.


அங்கு வந்து கொண்டிருந்த ரயில் மீது, டாப்ரிஸ் நகரில் இருந்து வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதியது. இதில் ரயில்களின் எஞ்சின் பெட்டிகள் உட்பட 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 31 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 75 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label