OUR CLIENTS
குழந்தை வரம் தரும் கார்ணாம்பட்டு கைலாசநாதர்!!
குழந்தை வரம் தரும் கார்ணாம்பட்டு கைலாசநாதர்!! Posted on 26-Nov-2016 குழந்தை வரம் தரும் கார்ணாம்பட்டு கைலாசநாதர்!!

வேலூர்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டில் சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோயில். இக்கோயிலை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடந்தன. புல், பூண்டுகளும் முளைந்து கிடந்ததால் பூஜைகள் செய்யாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் காட்பாடியில் ஓடைபிள்ளையார் கோயில் பக்கத்தில் புத்தக கடை நடத்திவரும் சிவனடியார் கனவில் கைலாசநாதர் தோன்றி கோயிலை புதுப்பித்து பூஜைகள் நடத்துமாறு பணித்துள்ளார். இதனடிப்படையில் கோயில் கடந்த 2015ம் ஆண்டு முட்புதர்கள் அகற்றப்பட்டும், புல் பூண்டுகளை களைந்தும் கோயிலுக்கு புத்துயிர் அளித்தனர் சிவனடியார்கள். இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டாக இந்த கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் கைலாசநாதர் கோயிலில் அதே கிராமத்தைச் சேர்ந்த பூசாரி பலராமன் என்பவர் பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி வருகிறார். இந்த கோயிலைச் சுற்றி அழகிய மணவாள விநாயகர் உள்ளார். வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீபாலமுருகன் வீற்றுள்ளனர். இதில் விநாயக பெருமான் இஸ்லாமிய சகோதரருக்கு அருள் பாலித்ததாக கோயில் பூசாரி பலராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்று முதல் அந்த முஸ்லிம் அன்பர் கோயிலுக்கு எண்ணெய் வாங்கி வந்து ஏற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாழடைந்து சிதிலமமடைந்து காணப்படும் இந்த கோயிலை புணரமைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஆக்க பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவத்தொண்டு செய்ய மனம் உள்ளோர் பொருளாகவோ, நிதியுதவியோ செய்து கோயிலை அழகுபடுத்த முன் வர வேண்டும். இந்த கோயிலுக்கு வேலு£ரில் இருந்து காட்பாடி, திருவலம் வழியாக ராணிப்பேட்டை, ஆற்காடு செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வேலு£ரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது. காட்பாடியில் இருந்து 7 கி.மீ.,தொலைவில் கோயில் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்த கோயிலுக்கு சென்று கைலாசநாதரை வழிபட்டால் பல தோஷங்கள் நீங்குவதுடன், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கை கூடி வரும்.

 குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுதான் இந்த கோயிலில் தனிச்சிறப்பு என்று சொல்லலாம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக இந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. சனிப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்த பூஜைகள் செய்து கைலாசநாதரை வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த கோயில் சிறப்பு என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலில் வழிபாடு செய்தால் செல்வ செழிப்பும், ஆயுள் நீடிப்பு, கடன் தொல்லை விலகுதல், பகைவர் விலகி ஓடுவர், குழந்தை பாக்யம் கிட்டும், திருமணம் விரைவில் கைகூடும் என்பது கைலாசநாதரை வழிபடுவோருக்கு கிடைக்கும் நன்மைகளாகும். பேருந்தில் செல்ல முடியாதோர் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களில் கோயிலுக்கு சென்று கைலாசநாதரை தரிசனம் செய்யலாம். நற்றுணையாவது நமச்சிவாயமே.

தொடர்புக்கு :

கே. உதயசங்கர்
115, காட்பாடி ரோடு, ஓடைபிள்ளையார் கோயில் அருகில்(உதயன் புத்தகக்கடை),
காந்தி நகர், வேலூர் - 6.
செல் : 9789769978.

Label