OUR CLIENTS
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய 7 வீரர்களின் பதக்கம் பறிப்பு: ஐஓசி
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய 7 வீரர்களின் பதக்கம் பறிப்பு: ஐஓசி Posted on 26-Nov-2016 ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய 7 வீரர்களின் பதக்கம் பறிப்பு: ஐஓசி

லண்டன் மற்றும் பீஜிங்கில் நடைபெற்ற ஒலி்ம்பிக் தொடரில் கலந்து கொண்ட வீரர்களில் பெரும்பாலானோர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வீரர்களின் மாதிரியை மீண்டும் பரிசோதனை செய்தது. அப்போது ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி்யது தெரியவந்தது.

இதனால் வீரர்கள் மீது ஐஓசி நடவடிக்கை எடுத்து வருகிறது. கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த இல்யா இல்யின் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு பீஜிங் மற்றும் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த இரு தொடரின்போதும் அவரிடம் இருந்து பரிசோதனைக்காக மாதிரி எடுத்து வைக்கப்பட்டது. அதை தற்போது மறுபரிசோதனை செய்தனர். இதில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது. இதனால் இரண்டு பதக்கங்களையும் இல்யின் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் ரஷியாவின் அலேக்சாண்டர் இவானோவ், மார்டோவாவின் அனாடீடோலி கிரிகு ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பெலாரஸ் வீராங்கனை அக்சனா மியான்கோவா தனது பதக்கத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த குண்டு எறிதல் வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர்.

மேலும் இரண்டு பெலாரஸ் வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Label