OUR CLIENTS
4 நாடுகள் ஹாக்கி: நியூசிலாந்தி்டம் இந்தியா தோல்வி
4 நாடுகள் ஹாக்கி: நியூசிலாந்தி்டம் இந்தியா தோல்வி Posted on 26-Nov-2016 4 நாடுகள் ஹாக்கி: நியூசிலாந்தி்டம் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்திய வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் 18-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் ஆட்டம் தொடங்கியதும் நியூசிலாந்து அணி ஒரு கோல் போட்டு சமன் செய்தது. அதன்பின் 47-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் நியூசிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றது.

ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடத்திற்கு முன் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் 57-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-2 என ஆட்டம் சமநிலைப் பெற்றது. ஆனால், அடுத்த சில வினாடிகளில் நியூசிலாந்து அணி மேலும் ஒரு கோல் அடித்ததால், அந்த அணி 3-2 என வெற்றி பெற்றது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் பதக்கத்திற்கான போட்டியில் மோதும் வாய்ப்பை இழந்தது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி நாளை மலேசியாவுடன் மோத இருக்கிறது. இதேபோல் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Label