OUR CLIENTS
500 ரன்களும்! 50 விக்கெட்டுகளும்! : அஸ்வின் புதிய சாதனை
500 ரன்களும்! 50 விக்கெட்டுகளும்! : அஸ்வின் புதிய சாதனை Posted on 28-Nov-2016 500 ரன்களும்! 50 விக்கெட்டுகளும்! : அஸ்வின் புதிய சாதனை

மொஹாலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் இந்த ஆண்டில் மேலும் ஒரு புதிய உலக சாதனை படைத்து நம்பர் 1 ஆல்ரவுண்டர் என நிரூபித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், நட்சத்திர வீரருமான அஸ்வின், இந்த ஆண்டில் மேலும் ஒரு புதிய உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார் தமிழக வீரர் அஸ்வின். தனது திறமையின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உயர்ந்தார்.

இந்நிலையில், பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்திய அஸ்வின், உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக உயர்ந்து தவிர்க்க முடியாத முன்னணி வீரராக திகழ்கிறார்.

பல சாதனைகளை தகர்த்தும், புதிய சாதனைகளை படைத்து வரும் அஸ்வின், அவ்வகையில் தற்போது புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

நடப்பு ஆண்டில் மட்டும் பேட்டிங்கில் 500 ரன்களுக்கு மேல் குவித்தும், பந்துவீச்சில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதன் மூலம் அச்சாதனையை தன்வசப்படுத்தினார்.

தற்போது, மொஹாலியில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்க இந்திய அணி தடுமாறியது.

ஆனால், பொறுமையுடன் விளையாடிய அஸ்வின், 82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இதனால் இந்திய அணி ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

Label