OUR CLIENTS
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜனாதிபதி: பதவி விலக தயார் என அறிவிப்பு
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜனாதிபதி: பதவி விலக தயார் என அறிவிப்பு Posted on 29-Nov-2016 ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜனாதிபதி: பதவி விலக தயார் என அறிவிப்பு

தென் கொரியா
தென் கொரியா நாட்டு ஜனாதிபதி தனது தோழியுடன் இணைந்து மாபெரும் ஊழலில் ஈடுப்பட்டதாக எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


தென் கொரியா பெண் ஜனாதிபதியான Park Geun-hye என்பவர் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தோழியான Choi Soon-sil என்பவருடன் இணைந்து ஜனாதிபதி பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக பெரும் தொகையை பெற்றதாகவும், இதற்கு ஜனாதிபதியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்விவகாரங்கள் தொடர்பான விசாரணையிலும் இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் தோழி கைது செய்யப்பட்டு தற்போது பொலிசாரின் விசாரணை வட்டத்தில் உள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுபோன்ற ஒரு சூழலில் ‘நாடாளுமன்றத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். பதவி விலக வேண்டும் என்பது தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணம் என்றால் அதற்கும் நான் தயார்’ ஜனாதிபதி Park Geun-hye அறிவித்துள்ளார்.

Label