OUR CLIENTS
‘‘சென்னையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு’’ அமைச்சர் உதயகுமார் பேட்டி!
‘‘சென்னையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு’’ அமைச்சர் உதயகுமார் பேட்டி! Posted on 01-Dec-2016 ‘‘சென்னையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு’’ அமைச்சர் உதயகுமார் பேட்டி!

சென்னை
‘நாடா’ புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை சென்னையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார், வருவாய்த்துறை செயலாளர் கலந்துகொண்டனர்.


இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், கடந்த ஆண்டைப்போன்று மழைவெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் தொடர்பு, செல்போன் சேவையில் பாதிப்பு ஏற்படாது. நீர் தேங்கும் இடத்திலிருந்து நீரை வெளியேற்ற முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மழையால் மின்கம்பிகள் வேலி அறுந்துவிழ வாய்ப்புள்ளதால் சாலைகளிலும் தெருக்களிலும் கவனத்துடன் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைவெள்ளத்தில் பாம்புகள் வரும்சூழ்நிலையால் கையில் கம்புடன் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரம் உள்ளவர்களுக்கு வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான மீட்புக்குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.

சென்னையில் 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வெள்ள இடர்பாடு குறித்து தகவல் தெரிவிக்க 1070 என்ற அவசர தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Label