OUR CLIENTS
சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் ஜோடி போட விரும்பும் ‘நயன்’
சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் ஜோடி போட விரும்பும் ‘நயன்’ Posted on 01-Dec-2016 சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் ஜோடி போட விரும்பும் ‘நயன்’

நயன்தாரா காட்டில்தான் அடைமழை. ஒரு காலத்தில் விஜயசாந்தி நடிக்கிறார் என்றாலே தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் அந்தப் படம் பூஜை போட்ட அன்றே விற்றுத் தீர்ந்துவிடும்.

விஜயசாந்திக்குப் பிறகு ஒரு நடிகைக்காக படம் பிசினஸ் ஆகிறது என்பது கொஞ்சம் அரிதாகி விட்டது. அந்தக் குறையை தீர்த்திருக்கிறார் நயன்தாரா. முன்பு விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் என்பார்கள். இப்போது அந்தக் கிரீடத்தை நயன்தாராவுக்கு அணிவித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாரா நடித்தாலே குறைந்தபட்ச வசூல் உத்தரவாதம் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை யோசித்து வருகிறார்கள் இயக்குநர்கள். டோரா, அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் என்று அடுத்தடுத்து ஹீரோயினிஸ் படங்களாகத்தான் நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதேநேரம், பெரிய நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்று வரும் இளம் நடிகர்களின் படங்களிலும் அவர் நடிக்க ஆசைப்படுகிறார். மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனோடு முதன்முறையாக ஜோடி சேர்கிறார்.

தமிழில் தன்னுடைய இரண்டாவது படமான சந்திரமுகியிலேயே ரஜினிகாந்துக்கு ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. மீண்டும் சிவாஜி படத்தில் பல்லேலக்கா பாட்டில் ரஜினியோடு ஆட்டம் போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கும் காலத்திலேயே மீண்டும் ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுகிறார். தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்க ரஜினி நடிக்கப் போகும் படத்தில் ஹீரோயினாகிவிட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அதே நேரம் கொடியில் தனுஷோடு ஜோடி சேர்ந்த திரிஷாவும், இதே வாய்ப்புக்காக காய் நகர்த்தி வருகிறார்.

இப்போது பந்து தனுஷின் பக்கத்தில் இருக்கிறது. அவருக்கு நயன்தாரா, திரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள். யாருக்கு வாய்ப்பளிப்பது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்.

Label