OUR CLIENTS
பாகிஸ்தான் அற்புதமான நாடு : டொனால்ட் டிரம்ப் புகழாரம்
பாகிஸ்தான் அற்புதமான நாடு : டொனால்ட் டிரம்ப் புகழாரம் Posted on 02-Dec-2016 பாகிஸ்தான் அற்புதமான நாடு : டொனால்ட் டிரம்ப் புகழாரம்

இஸ்லாமாபாத்
அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  


அமெரிக்காவில் கடந்த மாதம் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20ம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாக். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  

அமெரிக்காவின் 45வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை நவாஸ் ஷெரீப் தெலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கான தீர்வுக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்க விரும்புவதாக நவாஸ் ஷெரீப்பிடம் டிரம்ப் தெரிவித்தார். மேலும் தான் அதிபராக பதவி ஏற்கும் வரை காத்திருக்க தேவையில்லை, அதற்கு முன்னர் எப்போதும் வேண்டுமானாலும் தன்னை தொடர் கொள்ளலாம் என டிரம்ப் தெரிவித்தார்.  

டிரம்ப் தொடர்ந்து பேசுகையில், ‘நவாஸ் ஷெரீப் ஒரு பயங்கரமான நபர். ஒவ்வொரு வழியிலும் பிரதிபலிக்கும் படியான சிறந்த வேலைகளை நவாஸ் செய்து வருகிறார். அவரை சந்திக்க ஆவலாக உள்ளேன். பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பேசுவது, பல நாள் நெருங்கி பழகிய ஒருவருடன் பேசுவது போல் உணர்ந்தேன். மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ள பாகிஸ்தான் ஒரு ‘அற்புதமான’ நாடு. அறிவார்ந்த மக்கள் வசிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று’ என்றார்.  

அப்போது பாகிஸ்தான் வரும்படி டிரம்புக்கு ஷெரீப் அழைப்பு விடுத்தார். அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறுகையில், ‘அற்புதமான மக்கள் வசிக்கும், அழகான இடங்களை பார்பதற்காக விரைவில் பாகிஸ்தான் வருவேன். பாகிஸ்தான் மக்களிடம் அவர்கள் மிகவும் அற்புதமானவர்கள் என நான் கூறியதை தெரிவித்து விடுங்கள்’ என்றார்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

டிரம்ப் – ஷெரீப் தொலைபேசி உரையாடல் குறித்து டிரம்ப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா – பாகிஸ்தான் இடையில் உள்ள உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர். பாகிஸ்தானுடன் நீண்ட மற்றும் வலுவான உறவை ஏற்படுத்தி கொள்ள விரும்புவதாக ஷெரிப்பிடம் டிரம்ப் தெரிவித்தார் ’ என கூறப்பட்டுள்ளது. 

Label