OUR CLIENTS
அமெரிக்கா அதிபர் தேர்தலில் மிச்சல் போட்டியிட மாட்டார் : ஒபாமா திட்டவட்டம்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் மிச்சல் போட்டியிட மாட்டார் : ஒபாமா திட்டவட்டம் Posted on 02-Dec-2016 அமெரிக்கா அதிபர் தேர்தலில் மிச்சல் போட்டியிட மாட்டார் : ஒபாமா திட்டவட்டம்

வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சல் ஒரு போதும் போட்டியிட மாட்டார் என்று அவருடைய கணவர் ஒபாமா தெரிவித்தார்.  


அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்கும் ஒருவர், தன் குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளை மாளிகையில் குடியேறுவது வழக்கம். அந்த வகையில் இப்போது அதிபராக இருக்கும் ஒபாமா, தன் மனைவி மற்றும் மகள்களுடன் வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் ஒபாமாவை விட, அவர் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்சல் மிகவும் பிரபலம். இதை சமீபத்தில் எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றும் உறுதி செய்துள்ளது. அவருக்கு ஆதரவாக 79 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளது சமீபத்தில் எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  

இதையடுத்து அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மிச்சல் நிறுத்தப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக மிச்சல் பிரச்சாரம் செய்தார். அப்போது, டிரம்ப்பை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கனவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனவு எதுவாக இருந்தாலும், ஹிலாரியின் காலடி தடத்தை ஒரு போதும் பின்பற்ற மாட்டேன் என மிச்சல் பதில் அளித்தார்.  

இந்நிலையில் மிச்சல் குறித்த வதந்திக்கு அதிபர் ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோலிங் ஸ்டோன் பத்திரிகைக்கு ஒபாமா பேட்டி அளித்த போது, சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் மிச்சல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒபாமா, ‘ மிச்சல் மிகவும் திறமையானவர் தான். அவருக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையில் உள்ள இணைப்பு நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. ஆனால் அதிபராக இருப்பதற்கு மிகவும் விவேகம் தேவை. அதனால் வெள்ளை மாளிகைக்கான அதிபர் தேர்தலில் மிச்சல் ஒரு போதும் போட்டியிட மாட்டார் ’ என்றார்.

Label