OUR CLIENTS
உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா?
உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? Posted on 05-Dec-2016 உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா?

பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்கு தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால், நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால், அதனை சம்பாதிப்பதற்காக அன்றாடம் அயராது வேலை பார்க்கிறோம்.

நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது.

லட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு, நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது.

லட்சுமி தேவியை ஈர்க்க வீட்டில் செய்யக்கூடியவை

•    தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

•    வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும்.

•    வாரத்திற்கு இருமுறையாவது வீட்டைக் கழுவி, அப்படியே பூஜை அறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.

•    பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

•    தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையைத் தரும்.

•    பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் நல்லது.

•    வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம்.

•    பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.

•  வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

•    வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. தினந்தோறும் அதன் அருகிலாவது நாம் சென்று வருவது சிறப்பு.

•    பூஜை அறையிலோ, வீட்டின் முற்றத்திலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.

•    சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

மேலும், லட்சுமி தேவியின் அருளை பெற கீழ் உள்ள ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லி வாருங்கள். தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மட்டுமாவது சொல்லி வாருங்கள். உங்கள் இல்லத்திலும் செல்வ செழிப்புடம் மகாலட்சுமி குடிக் கொண்டு அருள்வாள்.

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீ பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகாரம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸூகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸூஸ்திரயெளவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்


ஸ்லோகத்தின் விளக்கம்
ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

Label