OUR CLIENTS
பா.ரஞ்சித் இயக்க..தாணு தயாரிக்க..முதல்வர் வாழ்கை ‘படமாகிறது’ ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்…!?
பா.ரஞ்சித் இயக்க..தாணு தயாரிக்க..முதல்வர் வாழ்கை ‘படமாகிறது’ ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்…!? Posted on 05-Dec-2016 பா.ரஞ்சித் இயக்க..தாணு தயாரிக்க..முதல்வர் வாழ்கை ‘படமாகிறது’ ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்…!?

தமிழக முதல்வர் ஜெ.வாழ்கை படமாகிறது. கலைபுலி தாணு  தயாரிக்கிறார்.கபாலி படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க.. முதல்வர் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு சமமான வேடம் ஏற்று பயமுறுத்தியவர் ரம்யா கிருஷ்ணன். இதுநாள் வரை நீலாம்பரி என்ற அடைமொழியுடன் வலம் வந்த இவர் ‘பாகுபலி’ வெளியீட்டுக்குப்பின் ‘சிவகாமி காரு’ என்ற புகழ் பெயருடன் வலம் வருகிறார்.

தன்னுடைய இளவயது முதலே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியப் படங்களில் நடித்து வருபவர் இவர்.

இதனிடையில் சினிமாவில் நடித்துக் கொண்டே டிவி சீரியல் மற்றும் ரியால்ட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில்தான் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாகவும் அதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றிய எந்த தகவலும் இதுவரை உறுதியாகவில்லை. ஆனால், இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சசிகாலா  அனுமதி பெற்ற பின் முறையான அறிவிப்புகள் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Label