OUR CLIENTS
லீவு கிடைக்காததால் வெப்கேம் மூலம் திருமணம் செய்த மணமகன்!!…
லீவு கிடைக்காததால் வெப்கேம் மூலம் திருமணம் செய்த மணமகன்!!… Posted on 07-Dec-2016 லீவு கிடைக்காததால் வெப்கேம் மூலம் திருமணம் செய்த மணமகன்!!…

சவுதி
லீவு கிடைக்காததால் சவுதி அரேபியாவில் இருந்து வெப் கேமிரா மூலம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் கேரள இளைஞர் ஒருவர்.


கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவர் சவுதி அரேபியவின் தலைநகரான ரியாத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மெக்காவில் பணிபுரியும் சாம்லா என்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் ஹாரிஸ் பணி புரியும் நிறுவனத்தில் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது. இதனால், தனது திருமண நாளன்று ஹாரிஸ் இந்தியாவுக்கு வர முடியாத சூழல் இருந்தது. இந்த இக்கட்டான சூழல் குறித்து இருவீட்டாரும் விவாதித்து, ஒரு புதுமையான முடிவை எடுத்தனர்.

அதன்படி, தனது திருமணத்தை ரியாத்திலிருந்து ஹாரிஸ் வெப்கேமரா மூலம் பார்த்துக் கொள்வது எனவும்,ஹாரிஸின் தங்கை நஜிதா மணமகளுக்கு தாலி கட்டுவார் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திட்டமிட்டபடி ஆழப்புழாவில் நடந்த தனது திருமண நிகழ்வுகளை வெப்கேம் மூலம் ஹாரிஸ் பார்க்க, மணமகள் சாம்லாவுக்கு, மணமகனின் தங்கை நஜிதா தாலி கட்டினார்.

Label