OUR CLIENTS
வெள்ளை மாளிகை முன் வங்காளதேச இந்துக்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளை மாளிகை முன் வங்காளதேச இந்துக்கள் ஆர்ப்பாட்டம் Posted on 12-Dec-2016 வெள்ளை மாளிகை முன் வங்காளதேச இந்துக்கள் ஆர்ப்பாட்டம்

வாஷிங்டன்
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசம் நாட்டில் கடந்த 1988-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் வங்காளதேசத்தின் தேசிய மதமாக அறிவிக்கப்பட்டது.


இந்த முடிவை எதிர்த்து அங்குள்ள பல சிறுபான்மை அமைப்புகள் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இஸ்லாமை நாட்டின் தேசியமதமாக அறிவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையில், அந்நாட்டில் சிறுபான்மை இன மக்களாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர் மற்றும் இந்துக்கள்மீது சமீபகாலமாக வன்முறை தாக்குதல் பெருகி வருகிறது.

கோயில் மற்றும் தேவாலயங்களுக்குள் புகுந்து படுகொலைகளை செய்யும் அளவுக்கு அங்கு நிலைமை மோசம் அடைந்து வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் இந்துக்கள் மீது 200-க்கும் அதிகமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வங்காளதேச அரசை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்னர் நேற்று ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஒபாமாவிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வங்காளதேசத்தில் இந்து கோயில்களும், இந்து மக்களின் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன. இந்து மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்து பெண்களை கற்பழிப்பதும், இந்துக்களை கொல்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது.

மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதில் வல்லவரான நீங்கள் வங்காளதேசத்தில் சிறுபான்மையின மக்களின்மீது கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும்.

வருங்கால அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசும் எங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என நீங்கள் அறிவுறுத்த வேண்டும். அந்த மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label