OUR CLIENTS
ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா
ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா Posted on 15-Dec-2016 ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா

புதுதில்லி
ராணுவத்துக்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.  


இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பென்னல்லா மெக்ரெட்டியும் ஐஎச்எஸ் ஜேன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ராணுவத்துக்காக உலக நாடுகள் செலவிடும் தொகை குறித்தும், எதிர்காலத்தில் அந்த நாடுகளில் ராணுவ செலவினம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தின.  

உலகில் உள்ள 105 நாடுகளின் ராணுவ செலவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில், ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.  

இது குறித்து அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கிரேக் காப்ரி கூறியதாவது: சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் 1.55 டிரில்லியன் டாலராக இருந்த ராணுவ செலவு, இந்த ஆண்டு 1.57 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமே இந்த செலவின உயர்வுக்கு காரணம். இருப்பினும் 2008 – 2009ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியின்போது ராணுவ செலவு குறைந்த அளவுக்கு 2018ல் உலக நாடுகளின் ராணுவ செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் ராணுவத்துக்காக 622 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. சர்வதேச அளவில் ராணுவத்துக்காக செலவிடப்படும் தொகையில் இது 40 சதவீதம் ஆகும்.  

சீனாவில் 2010ல் 123 பில்லியன் டாலராக இருந்த ராணுவ செலவு, 2020ல் 2 மடங்காக அதிகரித்து 233 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளில், பணக்கார நாடான சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது.  

கடந்த 1990ல் முதல்முறையாக ராணுவ செலவை குறைத்த ரஷ்யா அதன்பிறகு இந்த ஆண்டு குறைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 48 பில்லியன் டாலரை ரஷ்யா குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவே இதற்கு காரணம் என்று ரஷ்யா கூறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Label