OUR CLIENTS
முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பு Posted on 16-Dec-2016 முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பு

தருமபுரி

முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் நோக்குடனும், சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்திடவும் முடிவு செய்து ஓட்டுநர் பயிற்சி, கணினி பயிற்சி, கைப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற செயல் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், மேலும் முன்னாள் படைவீரர்கள் விருப்பப்படும் இதர பயிற்சிகளையும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் வழங்கி வருகிறது.


இப்பயிற்சிகளுக்கு வரும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு ஆகியவை அளிக்கப்படும். பயிற்சிக்குரிய கட்டணத்தையும் டெக்ஸ்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சிகளை அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்கள் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் வழியாக டெக்ஸ்கோ நடைமுறைப்படுத்தி வருகின்றது.


கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் மேற்காணும் பயிற்சிகளில் தங்களுக்கு விருப்பமான பயிற்சியில் சேர்ந்து பயனடைய அனைத்து முன்னாள் படைவீரர்களும் சென்னையில் உள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக பொது மேலாளரை, தபால் மூலமாகவோ அல்லது texcoaccts@gmail.com, என்ற மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

Label