OUR CLIENTS
சிவனுக்கு ஆறு பிள்ளைகள்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சிவனுக்கு ஆறு பிள்ளைகள்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை Posted on 20-Dec-2016 சிவனுக்கு ஆறு பிள்ளைகள்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை

எந்தவொரு புராணங்களையும் பற்றியும் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் கண்டிப்பாக தெரிந்திருக்காது, அப்படி பலரும் அறிந்திராத விஷயத்தை பற்றி காண்போம்.

சிவபெருமானுக்கு விநாயகர், முருகன் என இரண்டு பிள்ளைகள் மட்டும் தான் என்பது பொதுவாக சொல்லப்படும் விடயம். ஆனால் சிவனுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள் என்பது தெரியுமா?

அதில் முக்கியமானவன் தான் அந்தகா! இவரை பற்றி லிங்க புராணம், சிவ புராணம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, ஒருநாள் சிவன் கண்களை அவர் மனைவி பார்வதி துணியால் கட்டுகிறார். அப்போது ஒரு ஒளியுடன் அவர் கையில் ஒரு குழந்தை வந்து விழுகிறது. பிறக்கும் போதே கண்பார்வையில்லாமல் பிறக்கும் அந்த குழந்தைக்கு அந்தகா என அவர்கள் பெயர் வைக்கிறார்கள்.

ஹிரன்யக்‌ஷா என்னும் மன்னன் குழந்தை வரம் கேட்டு சிவபெருமானை வேண்ட அவர் அந்தகாவை அவருக்கு கொடுத்து விடுகிறார்.

அந்தகா பலசாலியாக வளர ஆரம்பித்தான், அப்போது சிலர் அவரிடம் கைலாச மலையில் அழகான பெண் ஒருவர் இருக்கிறார் என பார்வதி தேவியை பற்றி கூறியுள்ளனர்.

தன் சொந்த தாய் தான் பார்வதி என அறியாத அந்தகா அவரை கடத்த முயன்றான். நிலைமையை உணர்ந்த சிவன் அந்தகாவை கொல்ல நினைக்க அவன் பலத்தால் அதை அந்தகா தடுத்தான்.

பின்னர் சிவன், தேவி யோகேஷ்வரி என்ற பெண் கடவுளை உருவாக்கி அவனை அழிக்க அயூத்தமானார். அதன்படி அந்தகா நெஞ்சில் சூலாயுதத்தை வைத்து அவனை கொல்ல நினைத்தார் சிவன்.

தான் செய்தது மிகபெரிய தவறு என வருந்திய அந்தகா அவரிடம் மன்னிப்பு கேட்க, அவரும் அவனை புதிய வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வாழ்த்தினார் என புராணங்கள் கூறுகிறது.

Label