OUR CLIENTS
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் Posted on 20-Dec-2016 தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர்  திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றன.


நோக்கம்
அரசானது வறுமை ஒழிப்பினை மட்டும் அல்லாமல் ஆதிதிராவிட மக்களை தொழிலாளர் நிலையில் இருந்து தொழில் முனைவோராக உயர்த்தும் நேர்க்கில் பல்வேறு வருவாய் ஈட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு தெரிந்த, விருப்பமான, முன் அனுபவம் உள்ள தொழில் புரிந்து வருவாய் ஈட்டி பயன்பெறும் நேர்ககில் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி
• விண்ணப்பதாரர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்ததவராக இருக்க வேண்டும்.
• தாட்கோ பயிற்சித் திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
• 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
• கடன் கோரும் தொழிலில் முன் அனுபவம் உள்ளராக இருக்க வேண்டும்.
• விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.
• திருமணமாகத விண்ணப்பதாரராக இருப்பின் விண்ணப்பதாரரோ அல்லது அவர் குடும்பத்தினரோ தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது.
• திருமணமான விண்ணப்பதாரராக இருப்பின் இவரது குடும்பம் தனிகுடும்பம் எனக் கருதப்படும். இந்நிலையில் இவா; அல்லது அவா; குடும்பத்தினரோ தாட்கோவின் திட்டங்களில் மானியம் ஏதும் பெற்றிருக்ககூடாது.

நிபந்தனைகள்
 இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் கீழ்கண்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
• துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
• இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாராpன் பெயாpல் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
• விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.
• கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் வாங்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, மருத்துவ உடல் தகுதிச்சான்றிதழ் ஆகியவற்றை அந்தந்த மாவட்டங்களிலுள்ள் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் / அரசு கால்நடை மருத்துவரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
• பால்பண்ணை திட்டங்களுக்கு ஆவின் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
• மலர் நிலையங்கள் அமைத்தல் தனியார் நிறுவனங்கள் போன்றவர்களிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 1077 / 1800 425 7016 / 1800 425 1071 / 89 03 89 1077 (ம) 04342 - 260007 என்ற தொலைபேசிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Label