OUR CLIENTS
ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டின் பண வீக்கம் அதிகரிக்கும்புது
ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டின் பண வீக்கம் அதிகரிக்கும்புது Posted on 23-Dec-2016 ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டின் பண வீக்கம் அதிகரிக்கும்புது

புதுதில்லி
உயர்மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற நிதிநிலைக்குழு பொருளாதார நிபுணர்களை அழைத்து கருத்துக்களை கேட்டது.


இந்த நிலைக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி இருக்கிறார். இதன் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் மற்றும் பல்வேறு எம்.பி.க்கள் உள்ளனர். நேற்று அவர்கள் பல்வேறு நிபுணர்களை அழைத்து இருந்தனர்.

இந்த கூட்டம் வீரப்பமொய்லி தலைமையில் நடந்தது. மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டார். ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலையும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர் அடுத்த மாதம் 19-ந் தேதி வருவதாக கூறிவிட்டார்.

தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கமிட்டியின் நிபுணர் கவிதாராவ், மத்திய அரசின் முன்னாள் புள்ளியல் தலைவர் பிரணாப்சென், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தலைவர் மகேஷ் வியாஸ், மத்திய கொள்கை ஆராய்ச்சி நிபுணர் ராஜீவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் ரூபாய் நோட்டு ஒழிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு கருத்துக்களை நிதி குழுவிடம் தெரிவித்தனர். இவர்களில் கவிதாராவ், பிரணாப் சென் ஆகியோர் மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் நாட்டில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்கள்.

மேலும் இந்த நடவடிக்கை பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பண வீக்கத்தை அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயரும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

அத்துடன் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுத்த இந்த நடவடிக்கையால் கருப்பு பணத்தை உரிய அளவில் ஒழித்துவிட முடியாது. கருப்பு பணம் ரூபாய் நோட்டாக சிறிய அளவில் மட்டுமே பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலான கருப்பு பணம் சொத்துக்களாகவோ அல்லது தங்கமாகவோ மாறி இருக்கும் என்று கூறினார்கள். ராஜீவ்குமார் மட்டும் ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

நிபுணர்கள் கூறிய கருத்துக்களை மையமாக வைத்து பாராளுமன்ற குழு அறிக்கை தயாரிக்க உள்ளது. இந்த அறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பாராளுமன்ற நிலைக்குழு அடுத்ததாக நிதித்துறை அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளது.

Label