OUR CLIENTS
உயிர்க்கொல்லியான எபோலா நோய்க்கு வெற்றிகரமாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
உயிர்க்கொல்லியான எபோலா நோய்க்கு வெற்றிகரமாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு Posted on 23-Dec-2016 உயிர்க்கொல்லியான எபோலா நோய்க்கு வெற்றிகரமாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

ஜெனிவா
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபீரியா, சியாரா லியோன், நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது.


இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இதுவரை இந்த நோய்க்கு சுமார் 5 ஆயிரத்து 160 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லைபிரீயா நாட்டில்தான் இந்த நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் 2830 பேர் உயிரிழந்துள்ளனர். கினியா நாட்டில் 1100 பேர் உயிரிழந்துள்ளனர். மாலி நாட்டில் நோய் தாக்குதல் இப்போது தான் தொடங்கி உள்ளது.

தற்போது இந்த நாடுகளில் 14 ஆயிரம் பேர் எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த உயிர்க்கொல்லி நோயில் இருந்து மனித இனத்தை பாதுகாக்க உலக சுகாதார அமைப்பின் வலியுறுத்தலின் பேரில் கினியா நாட்டு அரசு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தன.

கினியா நாட்டில் உள்ள பாஸ்ஸி-குய்னீ என்ற கடலோரப் பிரதேசத்தில் நடைபெற்றுவந்த நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக சின்னம்மை நோய்க்கு போடப்படும் வட்டவடிவ தடுப்பூசி முறை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களை அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து சுமார் 12 வாரகாலம் வரை தொடரந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். முதலில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னாளில், ஆறுவயதை கடந்த குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சரிபாதி பேருக்கு ஆரம்ப காலத்தில் சற்று தலைவலி, தசைவலி போன்ற உபாதைகள் தோன்றின. எனினும், அந்த வலி எல்லாம் விரைவில் தீர்ந்தும் போனது.

எனவே, இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Label