OUR CLIENTS
மார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 17
மார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 17 Posted on 01-Jan-2017 மார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறேஅறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல்அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

பொருள்
உடுப்பதற்குரிய ஆடைகள், குடிக்கும் தண்ணீர், பசியாற உணவு முதலியவற்றை கேட்பவர்களின் மனம் நிறைவாகும் படி கொடுத்து அருளும் எங்கள் தலைவனே! நந்த கோபாலனே! நீ துயில் நீங்கி எழுவாயாக. பூங்கொடியே! குலவிளக்கே! எங்கள் தலைவியே! யசோதை தாயே! எழுந்தருள்வாயாக. ஆகாயம் பிளக்க உயர்ந்து நின்று அனைத்து உலகையும் அளந்து முடித்த உத்தமனே! தேவர்களின் தலைவனே! துயில் நீங்கி எழுந்திருப்பாயாக! செம்பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்த பலதேவரே! நீயும் உன் தம்பி கண்ணனும் துயிலாமல் விழித்தெழ வேண்டும். எங்களுக்கு அருள்புரிய வேண்டும்.

Label