OUR CLIENTS
இஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதலில் பலியான இரு இந்தியர்களின் உடல்கள் நாளை தாயகம் வருகை
இஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதலில் பலியான இரு இந்தியர்களின் உடல்கள் நாளை தாயகம் வருகை Posted on 03-Jan-2017 இஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதலில் பலியான இரு இந்தியர்களின் உடல்கள் நாளை தாயகம் வருகை

இஸ்தான்புல்
துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.


நேற்று முன்தினம் பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் நேற்றிரவு சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 70-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16-க்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டினர் என்றும் அவர்களில் இருவர் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பலியான இந்தியர்களில் ஒருவர் மும்பையை சேர்ந்த இந்தி சினிமா தயாரிப்பாளர் அபிஸ் ஹஸன் ரிஸ்வி, மற்றொரு பெண்ணான குஷி ஷா என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிபதிபராவார்.

அவர்களில் பிரேதங்களை இந்தியாவுக்கு உடனடியாக கொண்டுவரும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஈடுபட்டுள்ளார்.

அதன் விளைவாக, தற்போது துருக்கி நாட்டுக்கு சென்றிருக்கும் அபிஸ் ஹஸன் ரிஸ்வியின் தந்தை மற்றும் குஷி ஷாவின் சகோதரர் ஆகியோர் பலியானவர்களின் உடல்களுடன் இன்றிரவு இஸ்தான்புல் நகரில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலை மும்பை வந்தடைவார்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Label