OUR CLIENTS
ரூபாய் நோட்டு ரத்தால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் : உலக வங்கி
ரூபாய் நோட்டு ரத்தால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் : உலக வங்கி Posted on 13-Jan-2017 ரூபாய் நோட்டு ரத்தால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் : உலக வங்கி

வாஷிங்டன்
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டதால், நடப்பு 2016-17ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி சரியும் என்ற உலக வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியா 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று கணக்கிட்டுள்ளது. ரூபாய் நோட்டு ரத்துக்கு முன்னர், இது 7.6 சதவீதம் என்ற அளவை எட்டும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.

உலக வங்கி, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் அந்த அறிக்கையை வெளியிட்டார். உலக அளவில் ஒட்டு மொத்த பொருளாதாரம் 2017ம் ஆண்டில் 2.7 சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் தேக்க நிலை, முதலீடு குறைவு, நிலையில்லா சந்தை என பல சிக்கல்கள் இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கான கூறுகள் இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி கடந்த 2016ம் ஆண்டில், பொருளாதார மந்தநிலை காரணமாக 2.3 சதவீதம் என்ற குறைந்த அளவில் குறைந்ததாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டன. அதனால், 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடியும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார 7 சதவீதமாகக் குறையும் என மதிப்பிட்டுள்ளனர்.

ரூபாய் நோட்டு ரத்துக்கு முன்னர், 2016-17ம் நிதியாண்டில் 7.6 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கணக்கிட்டு இருந்தது. ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி கணிப்பு சதவீதத்தை உலக வங்கி குறைத்துள்ளது.

அதே நேரத்தில், அடுத்துவரும் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம்  2017-18ம் நிதியாண்டில் 7.6 சதவீதமும், 2019-20ம் நிதியாண்டில் 7.8 சதவீதமும் வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம், நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. வளரும் நாடுகளில் மிக விரைவாக பொருளாதார வளர்ச்சி அடையும் நாடாக இந்திய தொடர்ந்து இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. இதில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி உள்ளது.

ரூபாய் நோட்டு ரத்தால், வங்கிகளில் ரொக்க இருப்பு அதிகரித்து, குறைவான வட்டிக்கு கடன்கள் வழங்க வாய்ப்பு ஏற்படும் என்றும் இதனால் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Label