OUR CLIENTS
அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி தொடக்கம்? : தீபா இன்று அறிவிப்பு
அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி தொடக்கம்? : தீபா இன்று அறிவிப்பு Posted on 16-Jan-2017 அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி தொடக்கம்? : தீபா இன்று அறிவிப்பு

சென்னை
புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று அறிவிக்க இருக்கிறார். அவருக்கு ஆதரவாக மூத்த அதிமுக தலைவர்களும் அணி திரளக் கூடும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.


ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றியுள்ளார். ஆனால் அதிமுக தொண்டர்களால் இதை ஏற்க முடியவில்லை.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளன. அதிமுக தொண்டர்களின் ஆதரவு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்குதான் இருக்கிறது.

தீபா புதிய அரசியல் கட்சியை தொடங்க வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் நாள்தோறும் அவரது வீடு முன்பு திரண்டு வருகின்றனர். நாளை எம்ஜிஆர் பிறந்த நாளில் அரசியல் கட்சியை தொடங்க தீபா திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அதிமுக தொண்டர்களிடையே அறிவிக்க இருக்கிறார். அத்துடன் தீபாவை அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இன்று சந்தித்து ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Label