OUR CLIENTS
பசிபிக் நாடுகளில் தடையில்லா வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபர் டிரம்ப் உத்தரவு
பசிபிக் நாடுகளில் தடையில்லா வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபர் டிரம்ப் உத்தரவு Posted on 24-Jan-2017 பசிபிக் நாடுகளில் தடையில்லா வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்
பசிபிக் நாடுகளின் தடையில்லா ஒப்பந்தம் நடை முறையில் உள்ளது. டி.பி.பி. என்றழைக்கப்படும் இந்த அமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகள் இடம் பெற்றுள்ளன.


டி.பி.பி. அமைப்பில் உள்ள நாடுகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தங்களுக்குள் வர்த்தகம் செய்ய அந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் ஒரு பிரிவினர் எதிர்த்து வந்தனர்.

இதன் மூலம் அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் பறிபோகிறது என குற்றம் சாட்டினர். எனவே அதில் திருத்தம் கொண்டு வர முன்னாள் அதிபர் ஒபாமா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் பசிபிக் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார்.

நான் அதிபரானால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என உறுதி மொழி அளித்து இருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார். அவர் நேற்று வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து முழு நேரமாக பணிகளை கவனித்தார்.

அப்போது பசிபிக் தடையில்லா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக உத்தரவு பிறப்பித்தார்.

இதுவே அவர் அதிபரானதும் போட்ட முதல் உத்த வாகும். மேலும், ஓவல் அலுவலக ஊழியர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது ‘நாப்டா’ எனப்படும் வடஅமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தையும் மறுபரிசீலனை செய்ய இருப்பதாக கூறினார்.

அதற்காக மெக்சிகோ மற்றும் கனடாவுடன் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்கா இல்லா பசிபிக் தடையில்லா ஒப்பந்தம் முழுமை அடையுமா? என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

Label