OUR CLIENTS
மனித உரிமை கமிஷனுக்கு டைரக்டர் ஜெனரலை நியமிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மனித உரிமை கமிஷனுக்கு டைரக்டர் ஜெனரலை நியமிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted on 24-Jan-2017 மனித உரிமை கமிஷனுக்கு டைரக்டர் ஜெனரலை நியமிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுதில்லி
தேசிய மனித உரிமை கமிஷனுக்கு டைரக்டர் ஜெனரலை (விசாரணை) நியமிக்கக்கோரி வக்கீல் ராதாகாந்த திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம் கோர்ட்டு மனித உரிமை கமிஷனுக்கு டைரக்டர் ஜெனரலை நியமிப்பதில் தாமதம் காட்டி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்தது.


இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதுமே மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

நீதிபதிகள் கூறுகையில், “இந்த பிரச்சினையை நாங்கள் விசாரிக்க தொடங்கி சில உத்தரவுகளை பிறப்பிக்க நேர்ந்தால் அது உங்களுக்கு (மத்திய அரசு) சிக்கலை ஏற்படுத்தும். அடுத்த ஒரு வாரத்துக்குள் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு டைரக்டர் ஜெனரலை நியமிக்கவேண்டும். அதேபோல் இந்த அமைப்புக்கு, 4 வாரத்துக்குள் உறுப்பினர்களையும் நியமிக்கவேண்டும். இதன்பிறகும் உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படமாட்டாது” என்று உத்தரவிட்டனர்.

Label