OUR CLIENTS
ஒன்றிணைந்து செயல்படுவோம்: டிரம்ப் - மோடி உறுதி
ஒன்றிணைந்து செயல்படுவோம்: டிரம்ப் - மோடி உறுதி Posted on 26-Jan-2017 ஒன்றிணைந்து செயல்படுவோம்: டிரம்ப் - மோடி உறுதி

வாஷிங்டன்
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து செயலாற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதிபூண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றார். இதையடுத்து, உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக புதன்கிழமை காலையில் டிரம்ப் தொடர்பு கொண்டார். அப்போது, இருநாட்டு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், இந்தியாவை தனது உற்ற நண்பனாகவும், நெருங்கிய கூட்டாளியாகவும் அமெரிக்கா கருதி வருவதாகக் கூறினார்.

இதையடுத்து, இரு நாட்டு உறவுகள் குறித்து டிரம்பும், மோடியும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயலாற்றவும் இருநாட்டுத் தலைவர்களும் உறுதிபூண்டனர்.

இதுதவிர, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து இருவரும் ஆலோசித்தனர் என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு டிரம்ப் அழைப்பு: இந்த ஆலோசனையின்போது, அமெரிக்காவுக்கு வருகை தருமாறு நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார். அதேபோல்,இந்தியாவுக்கு வருமாறு டிரம்புக்கும் மோடி அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Label