OUR CLIENTS
இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரணாப் முகர்ஜி நன்றி
இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரணாப் முகர்ஜி நன்றி Posted on 27-Jan-2017 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரணாப் முகர்ஜி நன்றி

புதுதில்லி
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வை வளம் பெறச் செய்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவிப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் இந்தியா வந்திருந்தார்.

அவரை வரவேற்று பிரணாப் முகர்ஜி தில்லியில் புதன்கிழமை கூறியதாவது: மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை ஐக்கிய அரபு அமீரகம் தாராள மனதுடன் வரவேற்று, அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.

இதன்மூலம், எண்ணற்ற இந்தியர்களின் வாழ்வை அந்த நாடு வளமாக்கி வருகிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சுமார் 26 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தங்கள் இரண்டாம் தாயகமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவையும், ஐக்கிய அரபு அமீரகத்தையும் போன்ற பொறுப்பு மிக்க நாடுகள் மனித சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே குலைக்கக்கூடிய மதவாதம், பயங்கரவாதம், சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார் அவர்.

Label