OUR CLIENTS
இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் Posted on 27-Jan-2017 இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை
இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சார்பிலான 68-ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்றேன். நாட்டின் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மையே இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயகப் பேரியக்கம் திமுக. அதன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்று, அகில உலகத்துக்கே வழி காட்டும் வகையில் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்தி தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை வென்று எடுத்த மெரீனா கடற்கரையில் குடியரசு தின அணி வகுப்பு காட்சிகளை கண்டு ரசித்தேன்.

தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற்று, அனைவரும் அனைத்து வசதிகளும் பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த குடியரசு தினத்தில் அனைவருக்கும் என் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள்.

சுதந்திர தினத்தன்று கோட்டையில் மாநில முதல்வர் தேசியக் கொடியேற்றலாம் என்ற உரிமையை இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முதன்முதலில் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியிலிருந்த ஒவ்வொரு முறையும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குரிய ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுத்து, நாட்டுக்காகப் போராடிய, அவர்களைக் கெளரவித்து இருக்கிறது என்பது மறக்க முடியாத கடந்த கால வரலாறு என்று அவர் கூறியுள்ளார்.

Label