OUR CLIENTS
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பு: 1 மாதத்துக்குள் திட்டம் வகுக்க டிரம்ப் உத்தரவு
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பு: 1 மாதத்துக்குள் திட்டம் வகுக்க டிரம்ப் உத்தரவு Posted on 30-Jan-2017 ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பு: 1 மாதத்துக்குள் திட்டம் வகுக்க டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் திட்டத்தை 30 நாட்களுக்குள் வகுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களில் ஐ.எஸ்.ஸும் ஒன்று. ஆனால் இன்று உலகில் உள்ள பயங்கரவாதக் குழுக்களில் இஸ்லாமிய தேசக் குழுதான் மிக கொடூரமாகச் செயலாற்றி வருகிறது. ஒரு கலீஃபாவை உருவாக்கி ஆட்சி செய்து வருவதாக அந்த பயங்கரவாதக் குழு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பை எந்த விதத்திலும் சகித்துக் கொள்வதோ, பேச்சுவார்த்தை நடத்துவதோ சாத்தியமில்லை. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதிகளில் கொடூரமான தாக்குதல்களையும் கொலைகளைகளையும் நிகழ்த்தி வருகிறது. அந்தக் குழுவை விட்டு வைத்திருந்தால், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரிக்கவே செய்யும். ரசாயன ஆயுதங்களை அக்குழுவினர் உருவாக்க முயன்று வருகின்றனர்.

அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு இடங்களில் அப்பாவிப் பொதுமக்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளாக உருவாக்கி வருகிறார்கள். மத்திய கிழக்குப் பகுதியில் மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்கர்களான ஜேம்ஸ் ஃபோலி, ஸ்டீவன் ஸாட்லோஃப் உள்ளிட்டோரின் தலைகளை வெட்டி படுகொலை செய்தது ஐ.எஸ். ஐ.எஸ். தூண்டுதலின் பேரில், கடந்த 2015-ஆண்டில் கலிஃபோர்னியா மாகாணத்திலும், சென்ற ஆண்டு ஃபுளோரிடா மாகாணத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நமது தோழமை நாடுகளிலும் அந்த அமைப்பு தாக்குதல் நிகழ்த்தி ஏராளமான உயிர் சேதத்தை விளைவித்துள்ளது.

எனவே அந்த பயங்கரவாத அமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கு முழுமையான திட்டம் ஒன்றை உருவாக்குமாறு உத்தரவிடுகிறேன். கொள்கை ரீதியான நடவடிக்கைகள், தாக்குதல் நடவடிக்கைகள், இணையதளம் மூலமாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் அடங்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க வேண்டும். மேலும், அந்த அமைப்புக்கு கிடைத்து வரும் நிதியைத் தடுப்பது, எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்து வரும் நிதியை முடக்குவது, கலைப் பொருள்களை சூறையாடி சர்வதேச கருஞ்சந்தையில் விற்பனை செய்து திரட்டும் நிதியை முடக்குவது குறித்தும் திட்டத்தில் தெரிவிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் அந்தத் திட்டத்தை வகுத்து என்னிடம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக அமெரிக்க சட்ட விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமானால் அதையும் பரிந்துரைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Label