OUR CLIENTS
மோடியின் வானொலி உரை தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மோடியின் வானொலி உரை தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted on 30-Jan-2017 மோடியின் வானொலி உரை தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுதில்லி
"மன்-கீ-பாத்' என்ற பெயரிலான வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியிருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து உத்தரகண்ட் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. ரத்தூரி கூறியதாவது:
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடியின் வானொலி உரை ஒலிபரப்பப்படுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். எதிர்வரும் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு, வானொலி உரை நிகழ்த்துவது பிரதமருக்கு அழகல்ல.

ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில், இளைஞர்களைக் கவரும் வகையில் மோடி பேசியிருக்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது மோடி இவ்வாறு பேசி வருவது சரியல்ல என்றார் அவர்.

Label