OUR CLIENTS
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு Posted on 02-Feb-2017 தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

சென்னை
தமிழக சட்டசபை கடந்த 23-ந் தேதியன்று கூடியது. அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அன்று மாலை கூடிய அவையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிரந்தர சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


பின்னர் 24-ந் தேதி ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஜனவரி 27-ந் தேதி கொண்டு வரப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கியது.

ஜனவரி 31-ந் தேதி எம்.எல்.ஏ.க்களின் விவாதம் முடிவடைந்தது. அன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று உரையாற்றினார்.

பின்னர் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபை குழுக்கள் அமைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டார்.

அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டத்தை தள்ளிவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

Label