OUR CLIENTS
காதலிக்க மறுத்த மாணவி: கல்லூரி வளாகத்தில் எரித்துக்கொலை
காதலிக்க மறுத்த மாணவி: கல்லூரி வளாகத்தில் எரித்துக்கொலை Posted on 02-Feb-2017 காதலிக்க மறுத்த மாணவி: கல்லூரி வளாகத்தில் எரித்துக்கொலை

கேரளா
கேரளாவில் காதலிக்க மறுத்த மாணவியை கல்லூரி வளாகத்தில் எரித்துக் கொன்ற மாணவர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் படித்து வரும் லட்சுமி என்ற மருத்துவ மாணவியும்,அதே கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஆதர்ஷ் என்பவரும் ம் சில காலம் காதலித்து வந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த லட்சுமியின் பெற்றோர் அவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து லட்சுமி தனது காதலை கைவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.இந்த கல்லூரியில் படித்து வரும் லட்சுமி என்ற மருத்துவ மாணவியும்,

அதே கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஆதர்ஷ் என்பவரும் ம் சில காலம் காதலித்து வந்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்னர் இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த லட்சுமியின் பெற்றோர் அவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து லட்சுமி தனது காதலை கைவிட்டுள்ளார்.

ஆனால் தொடர்ந்து லட்சுமியை ,ஆதர்ஷ் பின் தொடர்ந்து வந்து தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.ஆனால் இதனை லட்சுமி ஏற்கவில்லை.இந்நிலையில் நேற்று அரியர் தேர்வு எழுத மருத்துவக் கல்லூரிக்கு வந்த ஆதர்ஷ் ,லட்சுமியின் வகுப்பறைக்கு கையில் பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார்.பின்னர் தன் மீதும்,லட்சுமி மீதும் அவர் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.

இதனால் பயந்து போன லட்சுமி, அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.ஆனால் அவரை துரத்திப் பிடித்த ஆதர்ஷ்,கல்லூரியின் நூலகத்தில் வைத்து அவருக்கு தீ வைத்துள்ளார். பின்னர் நூலகத்திற்கு வெளிய வந்த ஆதர்ஷ், தன் மீதும் தீ வைத்துக் கொண்டார்  இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Label