OUR CLIENTS
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: 85 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: 85 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா Posted on 02-Feb-2017 கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: 85 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 85 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.


அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் கோயில் ,சோழ பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் கொண்டுள்ள கோயில் இதுதான். தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக ,கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு சான்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலில் சிவ பெருமான் மூலவராக உள்ளார். யுனஸ்கோயின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு  85 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Label