OUR CLIENTS
ஏவுகணை பரிசோதனை: உறுதி செய்தது ஈரான்
ஏவுகணை பரிசோதனை: உறுதி செய்தது ஈரான் Posted on 02-Feb-2017 ஏவுகணை பரிசோதனை: உறுதி செய்தது ஈரான்

ஈரான்
அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டதை ஈரான் உறுதி செய்தது.


எனினும், வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை அந்தப் பரிசோதனை மீறவில்லை என்றும் ஈரான் தெரிவித்தது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டிய வல்லரசு நாடுகள், அந்த நாட்டின்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை அல்லை என்பதை அந்த நாடு உறுதிப்படுத்தவும், அதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இது தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணையை ஈரான் அண்மையில் பரிசோதித்ததாகவும், அந்த ஏவுகணை சுமார் 600 கி.மீ. பாய்ந்து சென்று வெடித்துச் சிதறியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின.

இந்தத் தகவலை உறுதிப்படுத்த ஈரான் மறுத்து வந்த நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹுசைன் டெஹ்கான் (படம்) புதன்கிழமை கூறியதாவது:

ஈரான் ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது உண்மையே. நாட்டின் படை வலிமையை மேம்படுத்தும் வகையிலேயே அந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்துக்கோ அந்தப் பரிசோதனை எதிரானது இல்லை என்றார் அவர். அணு ஆயுதம் ஏந்தி, நீண்ட தூரம் செல்லக்கூடிய "பாலிஸ்டிக்' வகை ஏவுகணைகளைப் பரிசோதனை செய்யக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label