OUR CLIENTS
ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது : ராதாரவி
ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது : ராதாரவி Posted on 02-Feb-2017 ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது : ராதாரவி

பழனி
பழனியில் நடிகரும் திமுக நிர்வாகியுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.


இவ்விழாவில் பங்கேற்ற பேசிய நடிகர் ராதாரவி  தமிழகத்தில் நல்ல எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் பணியாற்றுகிறார். அனைவரும் ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்றார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான தகுதியும் ஸ்டாலினிடம் உள்ளது என்று கூறினார்.

மேலும் தற்போது நான் எந்த தலைமையின் கீழும் இல்லை. விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன் நான் எனது சித்தப்பாவாக கருதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, விரைவில்  உடல் நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன் என்று கூறினார்.

Label