OUR CLIENTS
பாக்., இலங்கை சிறைகளில் 167 இந்திய மீனவர்கள்
பாக்., இலங்கை சிறைகளில் 167 இந்திய மீனவர்கள் Posted on 03-Feb-2017 பாக்., இலங்கை சிறைகளில் 167 இந்திய மீனவர்கள்

புதுதில்லி
பாகிஸ்தான், இலங்கை சிறைகளில் மொத்தம் 167 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்ள சிறைகளில் மொத்தம் 20 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் மொத்தம் 147 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் 708 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இதேபோல், பாகிஸ்தான் அரசு 858 இந்திய மீனவர்
களை விடுதலை செய்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மீனவர்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் நோக்கில், இலங்கையுடன் இணைந்து மீன்பிடித் துறைக்கான கூட்டு பணிக் குழு அமைக்கபட்டுள்ளது என்றார் வி.கே.சிங்.

இதற்கிடையே, "க்ரீமி லேயர்' முறையில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்திடம் இருந்து வரவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷண் பல் குர்ஜர் தெரிவித்தார்.

"க்ரீமி லேயர்' என்பது பொருளாதார ரீதியில் அரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் முறையாகும்.

Label