OUR CLIENTS
156 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்: அருண் ஜேட்லி
156 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்: அருண் ஜேட்லி Posted on 04-Feb-2017 156 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்: அருண் ஜேட்லி

புதுதில்லி
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றியதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் இதுவரை, 156 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில், நேற்று வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 156 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் மற்றும் சிபிஐ மூலம், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கிகளும் அறிக்கை அளித்துள்ளன.

இந்த முறைகேடு புகார் காரணமாக, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது என கூறியுள்ளார்.

Label